fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 14 ஆயிரத்திற்கு அதிகமானோர் கைது…

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 14:50

ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 14 ஆயிரத்து 795 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 ஆயிரத்து 665 வாகனங்கள் அதன் போது பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் இதுவரையான காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்கிள்ல மாத்திரம் 1327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சட்ட நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்ட விதிகளை மீறுவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிட தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 14:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க