கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் நான்கு ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளது. இருமல், தடுமல் அறிகுறியுள்ள அனைவரும் கொரோனா நோய் தாக்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வரை பாதுகாப்பான முறையில் சிகிச்சையளித்தல், கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சியை விஸ்தரித்தல், இருமல், தடுமல் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தருவோருக்கு விசேட வாட்களில் சிகிச்சையளித்தல், கொரோனா சிகிச்சை சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை வைத்தியசாலைக்கு உரிய முறையில் விநியோகித்தல், கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதி திட்டம் ஒன்றை ஆரம்பித்தல், கிளினிக் சிகிச்சைகளின் போது விசேட ஆலோசனைகளை வழங்கல் ஆகிய பிரேரணைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் பிரேரணை..
படிக்க 1 நிமிடங்கள்