fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குசந்தைக்கு பூட்டு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2020 13:26

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்குசந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் தொடர்ச்சியாக பங்கு சந்தை மூடப்படுமென இலங்கை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்கு சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

கடந்த 13ம் திகதிக்கு பின்னர் 20ம் திகதி மாத்திரம் கொழும்பு பங்கு சந்தை 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் திறக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்ததும் விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தது. இதன்காரணமாக நேற்றுமுன் தினம் வரை கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2020 13:26

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33