fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 100 பேர் வீடு திரும்பல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2020 12:50

14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவுசெய்த மேலும் 100 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். முறையான பரிசோதனைகளின் பின்னர், வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நேற்றைய தினமும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 321 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அங்கு ஆயிரத்து 773 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் வெளிநாட்டவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2020 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க