fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டுப் போரை நிறுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டுமென போப்பாண்டவர் வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:46

பிரான்சில் உள்நாட்டுப் போரை நிறுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டுமென போப்பாண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு யுத்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன. குறித்த இக்கட்டான சூழ்நிலையில் வைரசை ஒழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையை சர்வதேசத்திற்கு அறிவித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொருவரும் சுகாதார பிரிவினரின் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் மாத்திமே தமது உயிரைக்காப்பாற்றிக்கொள்ள முடியுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க