வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
Related Articles
அமெரிக்காவில் சமூக இடைவெளி உத்தரவு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 484 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் எதிர்வரும் இருவாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை உச்ச கட்டத்தை எட்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்குள் கட்டுப்படுத்தமுடியுமா என்பதே சந்தேகத்திற்கிடமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் பல்வேறு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியின் ஊடாக மாத்திரமே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும். அதற்கமைய ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை எவரும் வெளியிடங்களில் ஒன்று கூட முடியாதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.