fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:32

வர்த்தக நிலையங்களின் நாளாந்த விநியோக நடவடிக்கை தொடர்பில் கண்காணிக்கப்படுவதாப பாவனையாளர் அலுவலக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அசேல பண்டார தெரிவித்துள்ளார். மெனிங் சந்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் மொத்த விற்பனையாளர்கள் பருப்பு பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாவனையாளர் சட்டத்தின் கீழ் குறித்த குற்றத்திற்கென 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க