fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:28

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி , களுத்துறை, புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு 6 மணித்தியாலம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றவேண்டியது அவசியமாகும்.

ஒருவருக்கு ஒருவர் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவது கட்டாயமென கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 3 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க