fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:23

மின்சாரத்தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புஹூல்பொல பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புஹுல்பொல விவசாய கால்வாயில் நீர் இயந்திரத்தை பொருத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மின்சாரத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ராகல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெலிமடை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வலப்பனை – பதிய பெலல்ல பகுதியில் உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். வீதியில் சென்ற உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க