fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:50

குரோஷிய நாட்டின் குத்துச்சண்டை வீரர்கள் மூவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்றிருந்த வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று அண்மையில் லண்டனில் இடம்பெற்றது.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தகுதி சுற்றை நடத்தியிருந்தனர். இந்நிலையில் தகுதி சுற்றில் கலந்துகொண்டர் ஏனைய வீரர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேவேளை தகுதி சுற்றுகளில் கலந்துகொண்ட 6 பேர் வைஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் குழு லண்டன் குத்துச்சண்டை போட்டி ஒழுங்கமைப்பாளரை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:50

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo