fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி பூரண குணமடைந்துள்ளார்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:45

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12 ம் த திகதி அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ளதையடுத்து சமூக வலைத்தளங்களின் ஊடாக பொதுமக்களுக்கு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் உயிரிழந்துள்ளனர். 7 இலட்சத்து 20 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 458 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க