கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. சநதேக நபரான விமான படை வீரர் சம்பவத்தை அடுத்து தப்பிசென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்கென கடற்படை மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.