fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 18:10

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் வீடொன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அபின் உருண்டைகளும் கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இவை கைப்பற்றப்பட்டன. இருதயபுரம் பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டள்ளதுடன் அங்கிருந்து நபரொருவரும் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கசிப்பு உற்பத்தி நிலைய உரிமையாளரின் வீடு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 53 அபின் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டன. அவற்றில் ஆயிரத்து 325 மதன மோதகம் எனப்படும் அபின் உருண்டைகள் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 18:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo