வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவலைப்பெற விசேட வேலைத்திட்டம்
Related Articles
வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இலங்கையை தொடர்புகொள்ளுங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த இணையத்தளத்திற்கு www.mfa.gov.lk என்ற முகவரியினூடாக பிரவேசிக்க முடியுமென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு துரித மற்றும் செயற்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அதற்கென டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சகல தரப்பினரையும் இணைப்பதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அவசர சந்தர்ப்பங்களின்போது அரசாங்கத்திற்கு, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென குறித்த இணையத்தளத்தினூடாக முன்னெடுக்க முடியுமென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.