fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படும்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 12:51

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ம் திகதி வழங்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுதொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய கொடுப்பனவு இடம்பெறுமென நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவும் எதிர்வரும் 10 ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 6 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிமான அரச ஊழியர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க