உலகளவில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது..
Related Articles
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன. 5 இலட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 3 இலட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர். 19 ஆயிரத்து 357 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்காவில் 68 ஆயிரத்திற்கும் அதிமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 712 பேர் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னில் 498 பேரும் பிரான்சில் 365 பேரும் நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் செயற்பாடுகளில் உலக நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.