fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 16:18

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் 76 கிலோ கிரேமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில், போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடல்வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்க, கடற்படையினர் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்பரப்பில் மிதந்துவந்த பையொன்றை சோதனைக்கு உட்படுத்திய நிலையில், அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 பைகளிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் வர்த்தகர்கள், அவற்றை கைவிட்டு சென்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் தொகையை, மேலதிக விசாரணைகளுக்கென முளங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 16:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க