fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு காலப்பகுதியில் மக்கள் தமது அத்தியாவசிய கடமைகளை முன்னெடுக்க விசேட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 15:48

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள காலப்பகுதியிலும் மக்கள் தமது அத்தியாவசிய கடமைகளை முன்னெடுக்க கூடிய வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் அத்தியாவசிய கடமைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நபர்கள் , தமது பணியிடங்களுக்கு செல்ல முடியும்.

இதேவேளை நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை கொண்டுவரவும், கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தம்புளை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று அதிகாலை 4 மணிமுதல் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தேவையான அளவு மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்ள நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மற்றும் நுவரெலிய மாவட்ட செயலகம் என்பவற்றை தொடர்பு கொள்ள முடியுமென மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 15:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க