fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:25

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. அடுத்தமாதம் 10 ம் திகதி வரை போட்டிகள் நடத்தப்படமாட்டாதென அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு ரஷ்ய கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஆபிரிக்க கால்பந்தாட்ட போட்டித்தொடரும் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கெமரூன் இராச்சியத்தில் கடந்த 17 ம் திகதி குறித்த போட்டிகள் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:25

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo