fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் 14 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுலில்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:23

இந்தியாவில் இன்றைய தினம் 14 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

மக்கள் வீடுகளில் இருந்த வண்ணம் சுயதனிமைப்படுத்தலை பின்பற்றுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் தொற்றினார் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க