fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு சதோசவினால் முறையான வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:12

அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு சதோசவினால் முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லையென சதோஷவின் பிரதான அதிகாரி துஷ்மந்த தொட்டவத்த தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலத்தில் பதற்றமின்றி மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். சதோச களஞ்சியசாலைகளில் தேவையான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு சதோச இடமளிக்காதென அதன் பிரதான அதிகாரி துஷ்மந்த தொட்டவத்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க