fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 338 ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:06

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ம் திகதி முதல் இன்று காலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக அவர்கள் கைதாகியுள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்கள் தொடர்பில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த 3 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் காலை 6 மணி வரை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 14:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo