fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின் கட்டணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் வழங்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 13:53

மின் கட்டணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை இதற்கென கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையக் கருத்திற்கொண்டு மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டணத்தை செலுத்துவதற்கான காலம் நிறைவடைந்த போதும் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படமாட்டாதென அவர் சுட்டிக்காட்டினார். குறித்த காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்தாத குற்றச்சாட்டிற்காக மேற்கொள்ளப்படும் தண்டனை கட்டணமும் பொதுமக்களிடமிருந்து அறவிடப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2020 13:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க