fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 11 ஆயிரத்து 842 பேர்…

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 14:16

நாட்டில் தற்போது 11 ஆயிரத்து 842 பேர் சுய தனிமைப்படுத்தல் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அனைவரும் நாட்டை பற்றி சிந்தித்து இத்தேசிய திட்டத்திற்கு பூரண ஒத்தாசை வழங்குவது அவசியம் என இராணுவ தளபதி சுயாதீன தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா மற்றும் ஏனைய வீசாக்களின் அடிப்படையில் தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் எவ்வித இடையூறும் இன்றி நாட்டைவிட்டு செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையில் இடம்பெற்றது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்படும் வெளிநாட்டவர்களுக்கு விசேட தொலை தொடர்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் புத்தகயா உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்த இலங்கை யாத்திரிகர்கள் 10 பேர் நேற்றிரவு தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவின் புதுடில்லி நகரிலிருந்தே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீ லங்கன் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல். 196 இலக்கமுடைய விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர். இவர்கள் உடனடியாக இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கேகாலை பொது வைத்தியசாலையில் விசேட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தனது மாத சம்பளத்தில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு இலவசமாக முக கவசங்களை தயாரிக்கும் விமானப்படை வீரர் ஒருவர் தொடர்பான தகவல் பொலன்னறுவை லங்காபுற பகுதியில் பதிவாகியுள்ளது. டப்ள்யு. டப்ள்யு, நாலக்க எனப்படும் குறித்த விமானப்படை வீரர் விடுமுறையிலிருந்து வருகை தந்த போது முக கவசம் தயாரிக்கும் பணியிலிருந்து விடுபட்டார்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வீட்டில் தனியான அறையொன்றை ஒதுக்குவதே பொருத்தமானது. குறித்த நபர் மற்றும் அவரது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் ஆக குறைந்தது ஒரு மீட்டர் தூரம் விலகியிருப்பது நல்லது. வீட்டிற்குள் காற்றோட்டமிக்க அறையொன்றை நோயாளிகளுக்கு வழங்குவது பொருத்தமானதாகும். இவர் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஆக குறைந்தது ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒதுங்கியிருக்க வேண்டும். தனிமைப்படுத்தலுக்குட்படும் நபர் தனியான குளியல் அறையை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் குளியல் அறையை பயன்படுத்தியதன் பின்னர் குழாயின் பிடி கதவின் கைப்பிடி, உள்ளிட்ட குளியல் அறையின் அனைத்து பகுதிகளும் தொற்று நீக்கியால் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். மிக மு:க்கியமான தேவையை தவிர வேறு எந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபரின் இல்லத்திற்கு செல்ல கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் மற்றும் வீட்டின் ஏனைய உறுப்பினர்கள் அடிக்கடி சவர்க்காரத்தினால் கைகளை கழுவ வேண்டும். அழுக்கான கைகளால் கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது. உடம்பின் உஷ்ண நிலையை 2 நாட்களுக்கு ஒருமுறை சோதனை செய்து கொள்ள வேண்டும். இருமல், காய்ச்சல் சுவாச கோலாறு, தொண்டை நோ, போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் அப்பிரதேச சுகாதார அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசேதகருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். முக கவசம் மற்றும் கையுறையை மீண்டும் பயன்படுத்தாமல், காய வைப்பது அல்லது தீயிட்டு கொளுத்துவது சிறந்ததாகும். தனிமைப்படுத்தும் நபர் பயன்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், ஆடைகள் போன்றவற்றை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டுமென சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை விட பயங்கரமான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நாடுகள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளன. வெற்றிகரமான பலன்களைபெற்றுள்ள சீனா தனிமைப்படுத்துதலை விரும்பாத நபர்களை பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வலுகட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. இதன் பயங்கர தன்மை புரியாததன் காரணமாகவே சீனா இவ்வாறு செய்துள்ளது. பிரான்ஸில் தற்போது மருந்தகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு மாத்திரமே மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வேறு இடங்களுக்கு சென்றால் 135 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படுகின்றது. இது இலங்கை நாணயத்தில் 25 ஆயிரம் ரூபாவாகும். பிரான்ஸில் ஒருவர் முக்கியமான பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தாலியில்கொரோனா நோயாளிகளின் தொகை அதிகரித்து வருகின்றது. அங்கு நோயினால் இறப்போரை உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. மொத்தமாக இறுதி சடங்குகள் நடைபெறும். வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இவ்வாறு சட்டங்களை நாடுகள் அமுல்படுத்துகின்றன. இதேவேளை அநேகமான நாடுகளில் இருவர் சந்திக்கும் போது ஒரு மீட்டர் இடைவெளியில் பேச வேண்டுமென சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்விதிகளை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும்.

இது போன்ற பயங்கரவாத சூழ்நிலையிலிருந்து மீள்வதற்காக ஊடகங்கள் மூலம் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 14:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க