fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 11:23

இவ்வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் 15ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முடிவுகள் எதிர்வரும் 31ம் திகதிக்;கு எடுக்கப்படுமென என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏப்ரல் 15ம் திகதிக்கு பின்னர் எவ்வாறான சூழல் காணப்படுகின்றதென்பது தொடர்பில் ஆராய்ந்து, ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் தீர்மானம் பெறப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது விளையாட்டு மாத்திரமல்லவெனவும், மக்கள் பாதுகாப்பெனவும் இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 11:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க