fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் அதிவேக வீதி திறக்கப்படும்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 19:39

சகல அதிவேக வீதிகளும் மாலை 06.00 மணிவரை திறந்திருக்குமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளமையால் பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் வாகனங்கள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தை மாலை 06.00 மணிவரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் அதிவேக வீதி திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலாவதற்கு முன்னர் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 19:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க