fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இரத்த மாற்றுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 17:41

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இரத்த மாற்றுக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தமாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும் நபர்கள் 0115 332 153 மற்றும் 0115 332 154 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு, பதிவு செய்ய முடியும் என தேசிய இரத்தமாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 17:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க