fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெல்லி மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 17:30

இந்தியாவில் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழங்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஒடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார். மற்றுமொருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் குதார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடிக்கப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது. 3 முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகதி அறிவிக்கப்பட்டு பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 17:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க