பிட்டிகல மஹவத்த பிரதேசத்தில் ஒரு கிலோ 30 கிராம் பெறுமதியான ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனைக்குட்படுத்தியபோது குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய 33 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.