fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொது தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நன்பகல் 12.00 மணியுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 18:49

பொது தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நன்பகல் 12.00 மணியுடன் நிறைவு

பொது தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள்; நாளை நன்பகல் 12.00 மணியுடன் நிரைவடையவுள்ளது. இன்றைய தினமும் அரசியல் கட்சிகல் சுயேட்சை குழுக்கள் சில மாவட்டங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இதற்காக மிகச்சிலரே மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்தனர்

முதன்மை வேட்பாளர் டளஸ் அழகபெரும தலைமையில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெறமுன வேட்பமனு இன்று தாக்கல் செய்தது. மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

மாத்தறை மாவட்டத்திற்கு ஸ்ரீ லங்காபொதுஜன பெரமுன சார்பில் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்காக கேகாலை மாவட்டத்தில் வேட்பு மனு கையளிக்கப்பட்டது. முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கனகஹேரத் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கேகாலை மாவட்டத்திற்காக தேசிய மக்கள் சக்தி குழுவின் தலைவர் காமினி ரத்நாயக்க தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

அநுராதபுர மாவட்டத்திற்கு 4 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. இம்மாவட்டத்திற்கு 6 சுயேட்சை குழுக்கள் கட்;டுப்பணத்தை செலுத்தியிருந்ததுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லையென அநுராதபுரம் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் ஆர்.எம்.வன்னிநாயக்கதெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திற்கான வேட்;பு மனுவைஇன்று கையளித்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் வன்னி மாவட்டத்திற்கு அக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்றைய தினம் வன்னி தேர்தல் தொகுதிக்காக இன்றைய தினம் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

தேசிய மக்கள் சக்தியும் வன்னி தேர்தல் மாவட்டத்திற்காக இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது.

ஐக்கிய தேசிய கட்சி காலி மாவட்டத்திற்காக இன்று வேட்புமனுவை கையளித்தது. முதன்மைவேட்பாளர் முன்னாள் பா.உ வஜிர அபேவர்தன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி காலி மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. மாவட்ட தலைவர் நலின் ஹேவகே தலைமையில் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டடத்திற்காக வேட்பாளர் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் வேட்புமனுவை கையளித்தது. சமந்த வித்யாரட்ன தலைமையில் தேசிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்திற்காக இன்று வேட்புமனுவை கையளித்தது.
தேசிய மக்கள் சக்தி அநுராதபுரம் மாவட்டத்திற்காக குழுவின் தலைவர் வசந்த சமரசிங்க தலைமையில் வேட்புமனுவை கையளித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சைகுழுவொன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தது.

கம்பஹா மாவட்டத்திற்காக முன்னாள் பாஉ. விஜித்த ஹேரத் தலைமையிலான குழு தேசிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

ஜனசெத்த பெரமுன கேகாலை மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. சங்கைக்குரிய பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது.
சங்கைக்குரிய அத்துரலலியே ரத்தன தேரர் தலைமையிலான குழு எமது மக்கள் சக்தி எனும் பெயரில் கொழும்பு மாவட்டத்திற்கு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
ஸ்ரீலசுகவின் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவில் வாய்ப்பளிப்பதா என்பது தொடர்பில் அண்மை காலங்களில் விவாதங்கள் இடம்பெற்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஸ்ரீலசுகவின் உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். இதன் பிரகாரம் வீரகுமார திசாநாயக்க அநுராதபுரம் மாவட்டத்திற்கும் லசந்த அழகியவண்ண கம்பஹா மாவட்டத்திற்கும் தயாசிறி ஜயசேக்கர குருநாகல் மாவட்டத்திற்கும் கையெழுத்திட்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் இன்றும் சில கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்புமனுவை கையளித்தன. விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அகில இலங்கை தமிழர் மகா சபையின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை கையளித்தது.

பாராளுமன்ற தேர்தலுக்காக வவுனியா, மன்னார், முல்லைதீவு, மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்காக தமிழர் சமூக ஜனநாயக கட்சி அதன் முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
000திவ்யா
ஜனநாயக மக்கள் காங்கிரஸூம் இன்று வன்னி மாவட்டத்திற்காக மாவட்ட செயலகத்தில் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று திருமலை மாவட்ட செயலகத்தில் முன்னாள் பா.உ ஆர்.சம்பந்தன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது. இதேவேளை முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் தமிழர் சமூதாய ஜனநாயக கட்சி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது. 3 சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் மனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை திருமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் திருமலை கச்சேரியில் பிரதான அமைப்பாளர் அருன் ஹேமசந்திர தலைமையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இன்று அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 18:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo