fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பருப்பு, செமன் , பெரிய வெங்காயத்திற்கு நிர்ணய விலை இன்று முதல் அமுல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 12:17

நாட்டிலுள்ள சகல லங்கா சதோச வர்த்தக நிலையங்களின் ஊடாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிவாரண விலையில் பருப்பு மற்றும் செமன் ஆகியன விநியோகிக்கப்படுவதாக லங்கா சதோசவின் பிரதான நிறைவேற்று அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்தார்.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாவுக்கும் 425 கிராம் எடைகொண்ட செமன்டின் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இன்று முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சகல சதோச விற்பனை நிலையங்களிலும் இவற்றை கொள்வனவு செய்யமுடியுமென அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று முதல் பெரிய வெங்காயத்திற்கு உயர்ந்தபட்ச நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 12:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க