fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 15:26

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு  தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 15:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க