fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:41

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்தாலி மற்றும் தென்கொரியாவிலிருந்து வருகை தந்த சுமார் 170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்துகொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் அதனூடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடாதோர் பொலிஸாருக்கு தமது நிலைமையை தெளிவுப்படுத்த முடியும். அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடுகளிலே தனிமைப்படுத்தப்படுவர். அதேபோல் இம்மாதம் முதலாம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலபகுதியில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் 119 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புறகணிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கபடுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக சந்தேகிக்கப்படும் சகல நபர்களையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க