fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று அரச, வங்கி – வர்த்தக விடுமுறை அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2020 10:01

அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லையாயினும் , அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி இடம் பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையில் பணியாற்றும் சகலரும் இன்று பணிக்குச் சமூகமளிக்க வேண்டுமெனவும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை விசேட பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும். கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இன்றைய தினம் ; பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2020 10:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க