fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்கள் ஒன்றுகூடும் வகையிலான வழிபாடுகளை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:58

இம்மாதம் இறுதிவரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஆலயங்களில் இடைக்கிடையே வழிபாடுகள் இடம்பெறும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வழிபாடுகளையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஏனைய மதங்களின் தலைவர்களுக்கும் அரசாங்கம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கமைய மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வகையிலான வழிபாடுகளை நடத்துவதை தவிர்க்குமாறு புத்தசாசன கலாசார மதவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க