fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 காரணமாக சர்வதேச விளையாட்டுத் துறை ஸ்தம்பிதம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:55

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விளையாடடு போட்டிகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போட்டிகள் பலவும் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச விளையாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கால அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த போட்டிகள் பல தினம் குறிப்பிடப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கட் தொடர், இந்தியா – தென் ஆப்ரிக்கா போட்டி தொடர், நியூசிலாந்து – அவுஸ்ரேலியா கிரிக்கட் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாதம் ஆரம்பமாக இருந்த IPL போட்டிகளும் பிற்போடபட்டுள்ளன. சர்வதேச விளையாட்டு வீரர்கள் சிலரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேக்கப்படுகிறது. பல வீரர்கள் தனிமை படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்க்கும் வகையிலும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க