fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு விஜயம் செய்ய மேலும் 8 நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:58

மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸபெயின், ஜேர்மன், சுவிஸ்லார்ந்து, டென்மாக், நெதர்லாந்து, சுவிடன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றன.

குறித்த நாடுகளை சேர்ந்தவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதை தவிர்க்குமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு சிவில் விமானசேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகளை அழைத்து வருவது நேற்றுமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் 8 நாடுகளுக்கு இது குறித்தான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் வரை குறித்த தடையை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க