fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:48

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 63.5 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள பிரான்ஸில் பொதுமக்கள் ஒன்றுக்கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு பிரான்ஸ் தடைவிதித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்துக்கான பொதுமக்கள் விஜயமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பிய நாடான பிரான்ஸிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய வலயத்தில் இத்தாலியை அடுத்து வைரஸ் தாக்கத்தினால் ஸ்பெயின் அதிக தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. அந்நாட்டில் 6 ஆயிரத்து 46 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 191 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க