நாளைய தினம் அரசவிடுமுறை தினமாக அறிவிப்பு
Related Articles
நாளைய தினம் அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாட்டை சுமுக நிலைக்கு கொண்டுவரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய விடுமுறை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் உள்ள தேசிய பூங்கா மற்றும் மிருககாட்சிசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கென பூங்கா மற்றும் மிருககாட்சிசாலைகள் திறக்கப்படமாட்டாதென வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் சரத் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.