நைஜீரியாவில் லாசா வைரஸ் காய்ச்சலினால் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 855 பேர் லாசா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நைஜீரி மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு லாசா காய்ச்சலினால் 112 பேர் நைஜீரியாவில் உயிரிழந்தனர்.
அதனையடுத்து, இவ்வாண்டியின் ஆரம்ப பகுதியிலேயே நோய் மீண்டும் பரவ தொடங்கியதாக நைஜீரிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லாசா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.