ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை தேர்தலில் தனித்து போட்டியிடாது என முன்னாள் பா.உ திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். ஸ்ரீலசுக 3 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் மொட்டு சின்னத்தில் உள்ள கூட்டணிக்கு வெளியே தேர்தலில் போட்டியிடாது. ஒருசில மாவட்டங்களில் யாரேனும் நினைப்பதாயின் தனியாக போட்டியிட வேண்டுமெனில் அவர்களுக்கு தனியே சென்று போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 3 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. கௌரவ கோட்டாபய ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் கைச்சாத்திட்டுள்ளது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டமைப்பிலேயே ஸ்ரீலசுக இம்முறை தேர்தலில் களமிறங்குகின்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/uDpuxgMS1Lw”]