fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:34

சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். கூட்டு படைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈராக் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவொன்றை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆயுததாரிகள் என அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர். ஹஷத் ஷாபி எனப்படும் ஆயுதக்குழு சிரியாவின் பல பகுதிகளில் பதுங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்கிறது. குறித்த குழு, ஈராக் ஆதரவுடன் செயற்படுவதாக சிரியா தகவல்கள் தெரிவிக்கின்றன. குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருந்த இடத்தை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க