fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : ரவி உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:19

ரவி உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு


ரவி உள்ளிட்ட ஐவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமும்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஐவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன. மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்கென இன்று வரை மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தம்மை கைதுசெய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கமைய தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ரிட் மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பான மேலதிக வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணைமுறிகளில் மோசடி செய்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க