fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு என முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் அடிப்படையற்றது : இராணுவ தளபதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:27

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் அடிப்படையற்றதென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர ஷில்வா தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களுக்கு ஒரே நேரத்தில் கூட்டமாக சென்று அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் தற்காலிக பற்றாக்குறை ஏற்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்டுகளில் நிரம்பியிருந்தனர். அவர்கள் ஒரே தடவையில் கூடுதலான பொருட்களை கொள்வனவு செய்ததால் வர்த்தக நிலையங்களில் கையிருப்பிலிருந்த பொருட்கள் நிறைவடைந்தன.

இதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைப் போன்றதொரு நிலை உருவானது. மக்கள் வீணாக அச்சமடைந்ததன் காரணமாகவே பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முயற்சித்தனர். இதேவேளை நாட்டில் எவ்வித அசாதாரண சூழ்நிலையும் ஏற்படவில்லை. இதனால் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தவேண்டிய தேவையில்லையென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர ஷில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க