சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நபரொருவர் கைது
Related Articles
சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமாக மரக்குற்றிகள் கடத்தப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய துரிதமாக செயற்பட்ட புளியங்குளம் விசேட அதிரடிபடையினர் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகள் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.