fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 12:52

கொரோனா (கொவிட் -19) வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி சுற்றுலாக்களை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சகல பாடசாலைகளுக்கு அறிவிப்பிதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பரவி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும், பாடசாலை மாணவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo