fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா வீசா தடையை நாளை முதல் நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 12:22

சகல சுற்றுலா வீசாவையும் ரத்து செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது. நாளை முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தூதரக மற்றும் உத்தியாகப்பூர்வ மட்டத்திலான முக்கிய பயணங்களை தவிர்ந்த, ஏனைய சகல சுற்றுலா வீசாக்களையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கி அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகைத்தர முடியாத வகையில் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குவைட் இராச்சியமும் சகல வர்த்தக விமான போக்குவரத்துக்களையும் இடைநிறுத்தியுள்ளது. இதனிடையே உலக கால்பந்து சங்க கூட்டமும் கொரோனா அச்சம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மோல்ட்டா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது. வைரஸ் தாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென நிதியமொன்றை ஸ்தாபிக்க கெனடா தீர்மானித்துள்ளது. அத்துடன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த ஹங்கேரியா உத்தேசித்துள்ளது.

வைரஸ் அச்சம் காரணமாக ஜி – 20 நாடுகளின் விவசாய மற்றும் நீர் தொடர்பான மாநாடு பிற்போடப்பட்டுள்ளது. போலந்து மற்றும் யுக்ரேனில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பொது கூட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவிலிருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளை மட்டுப்படுத்த கௌதமாலா தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரஷ்யா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க