fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜயவர்தனபுர பல்கலை. மாணவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் நீதிமன்றில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 11:36

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 5 மாணவர்களும் இன்றைய தினம் நுகோகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர். விபத்துக்குள்ளான மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவனுக்கு சிகிச்சையளிப்பதற்கான தேவை ஏற்படின் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க