ரவி கருணாநாயக்க உட்பட நால்வருக்கெதிரான மனுவை ஆராயும் செயற்பாடு இன்று இடம்பெறவுள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் மனு விசாரிக்கப்பட்டது. குறித்த வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ன மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதவான்கள் முன்னிலையில் மனு நேற்று பகல் ஆராயப்பட்டது. இதன்போது எழுந்த காரணங்களை அடுத்து மனுவை ஆராயும் செயற்பாடு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.