fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தகுந்த நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:39

அரசாங்கம் தகுந்த நேரத்தில் எரிபொருள் விலையை குறைக்குமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொட தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள, அவற்றை இறக்குமதி செய்து நாட்டிற்குள் கொண்டுவர 25 நாட்கள் தேவைப்படுமென ச்சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த சந்தர்ப்பத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடந்த 4 மாதங்களில் 18 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. ஓரளவு எரிபொருள் விலை குறைந்தவுடன் ஒரு மாத காலத்தில் ஒரு பில்லியன் வரை இலாபம் கிடைத்தது. அரசாங்கம் சகல மக்களுக்கும் சமமாக நன்மை கிடைக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கும். அதற்கமைய தகுந்த நேரத்தில் , தகுந்த தருணத்தில் எரிபொருள் விலையினை குறைக்க அரசாங்கம் தீர்மானிக்குமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச்சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சரவை கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்ததன் பின்னர் இன்றைய தினமே நிவாரணம் வழங்க தயார் என நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்பர தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையினை குறைப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க